Skip to main content

Posts

Featured

துவாரகை சோம்நாத் யாத்திரை

                                                       துவாரகை சோம்நாத் யாத்திரை                    சைவமும் வைணவமும் சேர்ந்தே தழைத்து வந்த நாடு நம் நாடு. வடக்கே பத்ரி கேதார்,கிழக்கே பூரி புவனேஷ்வர்,மேற்கே துவாரகை சோம்நாத், தெற்கே வைணவக் கடவுளான ஸ்ரீராமபிரானே ஈஸ்வரனை பூஜித்த தலமான ராமேஸ்வரம் என நாட்டின் நான்கு மூலைகளுமே இதைப் பறை சாற்றுகின்றன. இந்தப் பதிவில் அரபிக்கடலின் அலைகள் அடிவருடிச் செல்லும் அருட்தலங்களான துவாரகை சோம்நாத் பற்றி சில தகவல்களைப் பார்க்கலாம்.                துவாரகை 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நகரம்   எனக்கூறப்படுகிறது.கண்ணபிரான்,கொடுங்கோலனான தனது மாமன்   கம்சனை வதம் செய்ததால் கோபமுற்ற கம்சனின்மாமனார்ஜராசந்தன்,   மதுரா நகரின் மீது மீண்டும் மீண்டும் படையெடுத்து வரவே,கிருஷ்ண   பகவான் போர்க்களத்தை விட்டோடி துவாரகை நகரத்தை சென்று   அடைந்ததாக ஒரு புராணக் கதை உண்டு.அதனால்தான் கண்ணனுக்கு   ரண் சோட் ராய் என்ற பெயரும் வந்ததாகக் கூறப்படுகிறது.   பரந்தாமனா பயந்தோடியது?இல்லை, ஜராசந்தனை வதம் செய்வதாக   குந்தி மகன் பீமன் ஏற்கனவே சபதம் எடுத்திருந்ததால் பீமன்   கையால்தான் அவ

Latest Posts